குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு விபரங்கள்...

குப்பிளான் தெற்கு குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்துக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவுக்கான கூட்டம் இன்று 25-02-2011  5.30 மணியளவில் கன்னிமார் ஆலய முன்றலில் கிராமசேவையாளர் திரு.சோ. பரமநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் சுமார் 25 பேர் வரையானோர் கலந்து கொண்டார்கள்.


தலைவர்:         கு. சர்வானந்தன் - பிரேரித்தவர் மு. நவரட்ணம், ஆமோதித்தவர் செ.கிரிதரன்.

உபதலைவர்:    மு. நவரட்ணம் - பிரேரித்தவர் சோ. பரமநாதன், ஆமோதித்தவர் செ.விஜிதரன்.

செயலாளர்:      செ. ரவிசாந் -   பிரேரித்தவர் கு. உதயகுமார், ஆமோதித்தவர் சி. தங்கராசா

உபசெயலாளர்: பொ. ஆனந்தகுமார் பிரேரித்தவர் செ.ரவிசாந் , ஆமோதித்தவர் சி. திருச்செல்வம்

பொருளாளர்:    செ. கிரிதரன் பிரேரித்தவர் பொ. ஆனந்தகுமார் , ஆமோதித்தவர் இ. தவராஜா

கணக்காய்வாளர்: கு. உதயகுமார்

நிர்வாகசபை உறுப்பினர்கள்: இ. தவராஜா, செ.விஜிதரன், சி. தங்கராசா, சி. திருச்செல்வம், இ. முகுந்தன்


இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகசபையானது இன்று முதல் இயங்கத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிக்குமரன் சனசமூகநிலைய வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று கிராமசேவையாளர் சோ. பரமநாதன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் மாதாந்தம் போடுவதற்கான செலவை மாதம் / வருடத்துக்கு வெளிநாட்டில் வாழும் எம்கிராமத்தவர்கள் ஏற்று தாமாக முன்வந்து உதவி செய்யுமாறும் கோரிக்கை  விடுத்துள்ளனர் நிர்வாக சபையினர்.

உதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக கிராமசேவையாளர் சோ. பரமநாதன் அவர்கள் மூலமாக உதவலாம்.


கிராமசேவையாளர் சோ. பரமநாதன் - தொலைபேசி இலக்கம் - 0213216982

                                                      கைபேசி இலக்கம்        - 0777043427


முன்செல்ல

 
Make a Free Website with Yola.