அருணகிரி அருணாச்சலம் அவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்...!!


நீங்கள் நீண்ட நாட்களாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தேவனுக்காக தீயாக வேலை செய்து வருகின்றீர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்....

நீங்கள் உங்களுடைய மதத்தின் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தால்... உங்களுடைய மதத்தின் மேல் காதல் வைத்திருந்தால் அதனை உங்களுக்குள்ளே தான் வைத்திருக்க வேண்டும். மற்றவர்களிடம் திணிக்க முடியாது...

இந்துமதத்தின் மேல் நம்பிக்கையுள்ள ஒருவனுக்கு கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்று நீங்கள் கூறுவதைப் போல கேவலமான விடயம் ஒன்று இருக்க முடியாது...

அதேபோல கிறிஸ்தவ மதத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ள ஒருவனுக்கு நான் சென்று பிள்ளையார் உங்களை ஆசீர்வதிப்பார் எனக் கூற முடியாது...

ஆகவே மதச் சகிப்புத் தன்மை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டும்.. எம் மக்கள் மத்தியில் Arunakiri Arunasalam, Arun Arunasalam, Kuppilan Church போன்ற பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி நாளொரு பொழுதும் தேவனின் கருத்துக்களைத் திணித்து வருகின்றீர்கள்...

உங்களின் ஆள்பிடிப்பு வேலைகளுக்கு தயவு செய்து இனியும் பேஸ்புக்கையோ ஏனைய சமூக ஊடகங்களையோ பயன்படுத்ததீர்கள்....

நீங்கள் சில வேளைகளில் உங்களுடைய வசதிக்காக தேவனைப் பற்றிப் பிடித்திருக்கலாம்... ஆனால் நீங்கள் கடந்து வந்த பாதையை மறக்க முடியாது...

தனிச் சைவக் கிராமமாக இருந்த குப்பிளானில் பிறந்து இருக்கின்றீர்கள்...  உங்களுடைய தகப்பனாரின் பெயர் அருணகிரிநாதர்... அருணகிரிநாதர் யாரென்று சிலவேளைகளில் நீங்கள் மறந்து இருக்கலாம்.... ஆனால் அருணகிரி நாதர் தான் இந்துக்களின் சொத்து என அழைக்கப்படும் திருப்புகழை இயற்றியவர் என்பது உங்களின் ஞாபகத்தில் இருக்கக் கடவது.... 

நீங்கள் ஒரு தடியை எடுத்து நன்றாகச் சுழற்றலாம்.... ஆனால் அது அடுத்தவரின் மூக்கின் நுனி வரை தான்... மற்றவர்களின் மூக்கில் படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.... மதச் சுதந்திரமும் அவ்வாறே....

-செய்தியாக்கம் : நியூ குப்பிளான் இணைய தகவல் பிரிவு -

 
Make a Free Website with Yola.