"பக்திப் பண்ணரசு"
திரு.
கதிர் சுந்தரலிங்கம்

அன்று! ஒரு காலம்!
பல்வேறு தமிழிசை விழாக்கள் கிராமம் தொட்டு நகரம் வரை தாயக மண்ணில் பல்வேறு இடங்களில் நடைபெறும் அந்த நிகழ்வுகள் இன்றும் பலருக்கும் பசுமரத்தாணி போல்  நினைவில் இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க மாட்டாது. ஆலயங்களில் இரவு இரவாக இயல், இசைநாடகங்களுடன் சேர்ந்த இன்னிசை விழாக்கள் நடைபெறும்! அதனை இப் புலம்பெயர் நாட்டிலிருந்து இன்றும் நினைத்தாலே ஒரு பரவசம் மனதில் தோன்றும். தற்போது கனடா உட்பட மேலைத்தேச  நாடுகளில் வாழும் நாம் அதனைத் தற்போது கடந்த காலத்தின் ஒரு கனவாகவே காண்கின்றோம். அந்த தாயக மண்ணின் இனிமையான பொற்கால வாழ்க்கையின் விழாக்களில் நடக்கும் இன்னிசைக் கச்சேரிகளில் அனேகமாக பல இடங்களில் நடுச்சாமத்தின் பின்பும் கூட "பக்திப்பண்ணரசு" திரு. கதிர் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசைப்பாடல்கள் நடைபெறவுள்ளது என்ற செய்தி இருந்தால் தூக்கக் கலக்கத்தில் இருப்போரையும் ஒரு முறை தட்டி விழித்திருக்கச் செய்யும்.                                                                                                                        மேலும்...


                                

 
Make a Free Website with Yola.