சித்திரை பூத்தது...! 2011..

சித்திரை பூத்தது
செவ்வாண்டு மலர்ந்தது...
இக்கரை எங்கணும்
இங்கிதங்கள் நிறைந்தது...
மனைகள் எங்கும்
மங்களம் பொழிந்தது...
மனதில் எல்லாம்
மகிழ்ச்சி குடிகொண்டது...
சோகங்கள் அகன்றிட அமைதி நிலை பெற
வரவேற்றிடுவோம் புத்தாண்டை
செல்வம் செழித்திட சமத்துவம் ஓங்கிட
கர புதுவருடமே தமிழர் வாழ்வில்
நிரந்தர விடியலைத் தருவாய்...