கன்னிமார் அம்பாள் ஆலய பூங்காவனத் திருவிழா, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள், சிறப்பு பண்ணிசைக் கச்சேரி தொடர்பான விபரங்கள் படங்களுடன்...

கன்னிமார் கௌரியம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த மகோற்சவப் பெருவிழாவைத் தொடர்ந்து இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது...

18.04.2011 திங்கள்கிழமை அன்று மாலை 4 .30 மணியளவில் அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பாக கிரியைகள் இடம்பெற்றது. 


பின்னர் விழா உபயதாரர்களினாலும், ஆலய அறங்காவலர் சபையினராலும் ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்பு பண்ணிசை கச்சேரி ஆரம்பமாகி எட்டு மணிக்கு முடிவடைந்தது.  


அதன் பின்னர் மகோற்சவ காலம் முழுவதும் இடம்பெற்ற பேச்சு போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசில் வழங்கும் வைபவம் ஆலய முன்றலில் இடம்பெற்றது. 


தொடர்ந்து  பூ மாலைகளால் விசேடமாக அலங்கரிக்கப்பட்ட அம்பாளின் திருவுருவம் பளிச்சென சிறப்பாகக் காட்சியளித்தது. தொடர்ச்சியாக வசந்தமண்டபப் பூஜைகள் இடம்பெற்று பஞ்சபுராணம் ஓதி அம்பிகை உள்வீதி, வெளிவீதி உலா வந்து அம்பாள் இருப்பிடத்தை வந்தடைந்தார்.



கடைசியாக ஆலய குருக்களால் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு அன்றைய பூங்காவனத் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
































கன்னிமார் கௌரியம்பாள் ஆலய பூங்காவன காட்சிகள்...

  நன்றி - தகவல் மற்றும் படங்கள் : குப்பிளானிலிருந்து தனுசன்....- 

முன்செல்ல

 
Make a Free Website with Yola.