குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சப்பறத்திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழாக் காட்சிகள்


வரலாற்றுப் பெருமை மிக்க குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் 11.08.2011 அன்று மாலை சப்பறத்திருவிழா இடம்பெற்றது. 


வழமை போல் பிரசங்கம் நிறைவடைந்ததும் எம்பெருமானுக்கு அழகான திருவாசியினாலும் மலர்கள் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தன் உடன் பிறந்தோனுடன் எழுந்தருளி சப்பறத்தில் வீதியுலா வந்தது கண்கொள்ளா காட்ச்சியாக இருந்தது.


வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள், அயலூரார் என பலரும் இக்காட்சியை வந்து காண்பதை அங்கே பார்க்கக் கூடியதாக இருந்தது.


வடக்கு வீதியில் தவில், நாதஸ்வரக் குழுவினர் அட்டகாசமாக முழங்கினர். அப்பொழுது சிலர் 1997 காலப்பகுதியில் நம் விநாயகனின் நிலை எவ்வாறு இருந்ததென்று நினைத்து ஆனந்த கண்ணீர் மல்கினார்...

தேர்த் திருவிழா...

12.08.2011 அதிகாலை ஐந்து மணியளவில் திருப்பள்ளிஎளுச்சியுடன் ஆரம்பமான கிரியைகள் பின் ஏழு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்று , எட்டு மணிக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஒன்பது மணியளவில் விநாயகன் வீரான கோலத்துடன். தேர்பவனிக்காக எழுந்தருளினான். உள்வீதிஎங்கும் செந்தாமரை மலர்களும் மழை பொழிந்தன.


பத்து மணியளவில் சித்திர தேரினிலே அமர்ந்த விநாயகனுக்கு திருப்பல்லாண்டு பாடி சிதறு தேங்காய் அடித்து அடியவர் வடம் பிடித்து எட்டு திக்கும் அரோகரா....அரோகரா....கோசத்துடன் தேர்ச்சில்லுகள் நம் வினாயகனுக்காய் சிரித்த வண்ணம் சுழல ஆரம்பித்தன.

இரண்டு மணியளவில் குளிர்ச்சியாக பச்சை சாத்திய வண்ணம் அவரோகணம் இடம்பெற்றது. அபிசேகத்துடன் பூஜைகள் முடிவடைந்தன.

தீர்த்தத் திருவிழா...

13.08.2011 பத்தரை மணியளவில் தீர்த்தத் கேணியில் சகல பூரண கிர்யைகள் வசம் தீர்த்தமாடிய விநாயகனுக்கு அடியவர்கள் பலர் அர்ச்சனை செய்து தம் கவலைகள் குறைகள் பலதையும் முறையிட்டு வணங்கினர்.


பதினொரு மணியளவில் பத்து நாளும் யாக பூசையில் இருந்த கும்பம் ஆதிமூல விநாயகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டு மாலை திருவூஞ்சல் பாடி கொடியிறக்கம், எம்பெருமான் வீதிவலம் வந்து சண்டேஸ்வர உற்சவம் மற்றும் குரு ஆசி போன்ற நிகழ்வுகளுடன் மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.


கற்கரை கற்பக விநாயகனின் முக்கிய மகோற்சவ காலங்களில் குப்பிளானில் இருந்து ஒரு தேர்ந்த படப்பிடிப்பாளனைப் போல் மிகச் சிறப்பான முறையில் படங்கள் மற்றும் மகோற்சவப் பெருவிழா தொடர்பான தகவல்களையும் தந்துதவிய தனுசனுக்கு நியூ குப்பிளான் இணையம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...

முன்செல்ல

 
Make a Free Website with Yola.