குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்துக்கு 50, 000 ரூபாவை நன்கொடையாக வழங்கி கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு உதவிய சுவிஸ் வாழ் குப்பிளான் அன்பர்
திரு. அருணாச்சலம் அருணகிரிநாதன் குப்பிளானை சொந்த இடமாகவும் சுவிற்ஸர்லாந்து லவுசான் மாநிலத்தில் வசித்து வருபவருமாகிய அருணாசலம் அருணகிரிநாதன் என்பவரால் கடந்த வருடம் ஆனி மாதம் குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களின் கல்வி வளர்சிக்காக, அப்பாடசாலையின் அதிபர் திரு. குணரத்தினம் அவர்களுக்கு அப்பிரதேச கிராமசேவகர் திரு. பரமநாதன் மூலம் ரூபாய் 50, 000 வழங்கப்பட்டது.அந்த நிதியானது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தீர்மானத்துக்கமைய அதிபரினால் புத்தகங்களும், சப்பாத்துக்களும் கொள்வனவு செய்யப்பட்டு கஷ்டப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.அத்துடன் ஓரிரு அலுவலக அலுமாரிகளும் வாங்கப்பட்டது. இதற்கான கொள்வனவு சிட்டையும் இக்கட்டான சூழ்நிலையிலும் பாடசாலையின் நிலை அறிந்து உதவிய குப்பிளான் அன்பர் திரு அருணாச்சலம் அருணகிரிநாதனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இப்படியாக எங்கே இருந்தாலும் எங்களின் மண்ணை மறவாத குப்பிளான் அன்பர்களை அழகிய செம்மண் கிராமமும் அதன் உறவுகளும் என்றுமே மறக்க மாட்டார்கள்.முன்செல்ல
 
Make a Free Website with Yola.