சைவ சமயத்தின் தனித்துவம் காக்க ஒன்றிணைவீர்! குப்பிளான் மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் 

சைவ சமயத்தின் தனித்துவம் காக்க ஒன்றிணைவீர் என்ற இந்தச் சுவரொட்டி தற்போது குப்பிளான் எங்கும் ஒட்டப்பட்டுள்ளது. 

அங்கிருந்து இந்து சமயத்தின் மேல் தீவிர பற்றுக் கொண்ட அன்பர் ஒருவர் இந்த துண்டுப் பிரசுரத்தை எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

குறித்த  துண்டுப் பிரசுரத்தைப் படிக்க முன் உங்களுடன் ஒரு நிமிடம்,

காலம் காலமாக தவப் பெரும் ஞானிகளாலும், அறிஞர் பெருமக்களாலும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட தொன்மையான எங்கள் இந்துமதம் படும் பாட்டைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது. 

தனிச் சைவக் கிராமமாக இருந்த குப்பிளானில் இன்று அரங்கேறும் புதிய காட்சிகளை பார்க்க முடியாமல் அங்குள்ள பெரியவர்கள் உண்மையிலேயே மிகவும் வேதனைப்படுகிறார்கள். 

சிவனின் புகழ் பாடும் பாடல்களும், பிள்ளையார், முருகன், அம்மன் என்று பக்தி கீதங்கள் கேட்டுப் பழகிய எங்கள் குழந்தைகளும் பெரியவர்களும் இன்று தேவனின் பாடல்களை அதிக ஓசையோடு எந்நேரமும் கேட்க வைக்கப்பட்டுள்ளார்கள். 

இதனை ஒரு திட்டமிட்ட திணிப்பாகவே எங்கள் ஊரில் உள்ள பெரியவர்கள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கிறார்கள். 

இளைஞர்களாலும் பெரியவர்களாலும் இணைந்து கட்டமைக்கப்பட்ட எந்தவித சமரசங்களுக்கும் இடம் கொடுக்காத இந்து சமயத்தைப் பாதுகாக்கும் தீவிர இந்து அமைப்பு ஒன்று இன்றைய காலத்தின் உடனடித் தேவையாக உள்ளது. 

இதனை உலகம் எங்கும் உள்ள எங்கள் மக்கள் உணர்வார்களா? 

 

 
Make a Free Website with Yola.