எமது கிராம வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளிலுமுள்ள துடிப்புள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து வினைத்திறன் மிக்க இளைஞர் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான அறிவித்தல்...


முடிவடைந்த போரின் பின்னர் எங்களுடைய கிராமம் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் அங்கு பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன... நாடு அபிவிருத்தியடைந்து வரும் இந்த நேரத்தில் எமது கிராமத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் அங்குள்ள வறிய மக்களை வளப்படுத்தவும் செயல்திறன் மிக்க ஒரு இளைஞர் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஒன்று இன்று எழுந்துள்ளது....

இன்று எம் கிராமத்தில் உதாரணமாக குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் ஏராளமானோர் காலைச் சாப்பாடு கூட சாப்பிடாமல் தான் பாடசாலை வருகிறார்கள்... வன்னியிலிருந்து அகதிமுகாமூடாக விடுதலையாகி வந்த எம் கிராமத்தைச் சேர்ந்த பல உறவுகளும் அன்றாட செலவுக்கே அல்லாடுகிறார்கள்.... இப்படியாக பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளின் மத்தியில் எமது இன்று கிராமம் உள்ளது...

குப்பிளானில் உள்ள எம் கிராமத்தின் மீது அக்கறை கொண்ட வினைத்திறன் மிக்க துடிப்புடன் செயலாற்றக் கூடிய இளைஞர்கள் பலர் புலத்தில் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... அவர்கள் ஏதோ ஒரு வகையில் நேரடியாக எமது கிராமத்துக்கு உதவுவதற்கு  தயாராக உள்ளார்கள்... ஆனால் அதற்க்கான ஒழுங்கான ஒன்றிணைக்கக்கூடிய கட்டமைப்புக்கள் இன்னும் சரியாக எம் கிராமத்தில் ஏற்படுத்தப்படவில்லை...

தற்போது குப்பிளானில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்கள் பலர் ஒரு நிறுவன ரீதியான செயலாற்றல் மிக்கதொரு அமைப்பை உருவாக்க முன்வந்துள்ளார்கள்... அப்படியானதொரு செயல்திறனும் உறுதியும் அர்ப்பணிப்பு ஆற்றலும் உடைய ஒரு கட்டமைப்பு இன்று எமது கிராமத்தின் வரலாற்றுத் தேவையாக மாறியுள்ளது...

இதற்க்கு குப்பிளான் இளைஞர்கள் உலகின் எந்தத் திசையில் இருந்தாலும் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்... ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எம் கிராமத்தின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதி தெரிவு செய்யப்படுவார்... பிரதிநிதிகளுக்கிடையில் கலந்து பேசி சிறந்தொரு தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படுவார்கள்...  இவை அனைத்து பிரதிநிதிகளின் சம்மதத்துடனேயே இடம்பெறும்... இதேபோல் குப்பிளானில் உள்ள துடிப்புள்ள இளைஞர்களையும் ஒன்றினைத்து கட்டமைப்புக்குள் உள்வாங்கி அங்குள்ள தேவைகள் குறித்து அறிந்து  நேரடியாக உதவிகள் செய்யப்படும்...

உருவாக்கப் போகும் அமைப்பானது 100 வீதம் நம்பிக்கையான, வினைத்திறன் மிக்க அமைப்பாக செயல்படப் போவதில் எந்தவித சந்தேகமும் இல்லை... முதலில் ஒன்றிணைவு ஒன்றை ஏற்படுத்துவதற்கு எம் கிராமத்தில் மீது அக்கறை உள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த அமைப்பில் உறுப்பினராக இணையுங்கள்....

இணையும் ஆர்வம் உள்ளவர்கள் எங்களது மின்னஞ்சலுக்கு உங்களின் பெயர், வசிக்கும் நாடு, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை அனுப்பி வையுங்கள்... தொடர்ந்தும் நாங்கள் விவாதிப்போம்... அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்...

உங்கள் ஒவ்வொருவரினதும் மேலான விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை எங்களது kuppilan@live.com என்ற எமது மின்னஞ்சல் ஊடாக தெரிவிக்கலாம்.. உங்களது கருத்துக்கள், மற்றும் விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலளிக்கப்படும்...

உருவாக்கப் போகும் செயல்திறன் மிக்க இந்த இளைஞர் கட்டமைப்பால் நாளை எங்கள் கிராமம் இன்னும் அழகாகும்...

தகவல்,
குப்பிளான் நண்பர்களின் சர்வதேச வலையமைப்பின் பிரதிநிதிகள்...


முன்செல்ல

 
Make a Free Website with Yola.