குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய புதிய உறுப்பினர் தெரிவுக்கான பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தல்...

குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தின் புதிய உறுப்பினர் தெரிவுக்கான பொதுக்கூட்டம் நாளை 25-02-2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற உள்ளது.

கடந்த கால யுத்ததினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சனசமூக நிலையமானது 2002 ஆம் ஆண்டு மீள கட்டியமைக்கப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இயங்கி வந்தது...

பின்னர் மீண்டும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் தொடர்ந்து இயங்குவதில் தடங்கல்கள் ஏற்பட்டது...

தற்போது எமது கிராமப் பெரியவர்களின் அயராத முயற்சியினால் சனசமூக நிலையம் மீளவும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாகவே புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்க்கான கூட்டம் இடம்பெற உள்ளது. நாளை நடைபெற உள்ள கூட்டத்துக்கு குப்பிளானிலுள்ள பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தவறாது சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவுகள், பெறுபேறுகள் பின்னர் அறியத் தரப்படும்.


முன்செல்ல

 
Make a Free Website with Yola.