குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் உதயமாகியது! 


பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் தொடர்ச்சியாக இயங்கி வருகின்ற குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம் இன்னொரு அடியினை எடுத்து வைத்துள்ளது.

குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம், குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

குறிஞ்சிகுமரன் சனசமூக நிலையத்தின் வரலாறு, காணொளிப்பதிவுகள், காட்சிப்பதிவுகள் என்பன இனி வரும் காலங்களில் இவ் இணையத்தில் பதிவேற்றப்படும்.

இந்த இணையத்தை இராசையா காண்டீபன் (தீபன்) அண்ணா அவர்கள் சிறப்பான முறையில் உருவாக்கி அதனை பதிவு செய்தும் உள்ளார்.

இந்த இணையமானது நேரடியாக குப்பிளானில் இருந்து குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய அங்கத்தவர்களினால் இயக்கப்படும்.

குப்பிளானில் இருந்து இயங்கும் சமூக அமைப்பு ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது இணையம் என்ற பெருமையையும் குறிஞ்சிக்குமரன் இணையத்தளம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்துக்கான உத்தியோகபூர்வ இணையத்தைப் பார்வையிட குறிஞ்சிக்குமரன் இணையத்தளம் என்ற பெயரின் மேல் அழுத்தவும். 

-செய்தியாக்கம் - நியூகுப்பிளான் இணைய தகவல் பிரிவு-

 
Make a Free Website with Yola.