குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலைய வளர்ச்சிக்கு நிதிப்பங்களிப்பு செய்த உறவுகளின் விபரங்கள்! 

குப்பிளான் குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையமானது பல்வேறு குறைபாடுகளுடனும் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சனசமூக நிலையத்துக்கு தொடர்ச்சியாக பத்திரிகை வரவை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் குப்பிளான் வாழ் மக்களிடம் இருந்து 310 ,000 இலங்கை ரூபாய்கள் திரட்டப்பட்டுள்ளது.

குப்பிளான் வாழ் உறவுகளிடம் இருந்து நிதி சேகரிக்கும் பணியானது குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான திருவாளர் நடராஜா லோகநாதன் ( நாதன்) 0045-48441070 (டென்மார்க்) அவர்களினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

நாதன் அண்ணா அவர்கள் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் குப்பிளான் மக்களை அதிலும் குறிப்பாக இளம்தலைமுறையினை ஒன்றிணைத்து எமது கிராமத்தின் முக்கிய சனசமூக நிலையங்களில் ஒன்றான குறிஞ்சிக்குமரனை முன்னேற்றுவதில் வெற்றியும் கண்டுள்ளார்.

அவரது அயராத உழைப்பினாலும் விடாமுயற்சியாலும் எமது மக்களின் கல்வியறிவை முன்னேற்றும் வகையிலான சிறந்த நோக்கம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எங்கு வாழ்ந்தாலும் தாய் மண்ணை மறவாத நாதன் அண்ணாவையும் மற்றும் சனசமூக நிலையத்துக்கு நிதி உதவி புரிந்த அனைத்து உள்ளங்களையும் நன்றியோடு வாழ்த்துவதில் நியூ குப்பிளான் இணையம் பெருமையடைகின்றது.

புலம்பெயர் குப்பிளான் வாழ் உறவுகளிடம் இருந்து சேர்க்கப்பட்ட மொத்த பணமான  310 ,000 ரூபாயும் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம் சார்பில் நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளது. இந்த பணம் மூலம் கிடைக்கும் வட்டியில் தொடர்ச்சியாக பத்திரிகை போடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வருட வட்டியாக 25,000 ரூபாய்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சேர்க்கப்பட்ட மொத்த பணமும் லோகநாதன் நடராஜா (நாதன்), தவேஸ்வரி இராஜதுரை, உதயகுமார் ஆகியோரின் பெயர்களில் இணைப்புக் கணக்கு ஒன்று வங்கியில் உருவாக்கப்பட்டு வைப்பிலிடப்பட்டுள்ளது.

மூன்று பேரில் ஒருவர் இல்லாமலும் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது. தவிர வைப்பிலிடப்பட்டுள்ள முழுத்தொகையும் இனி வரும் காலங்களில் சனமூக நிலையம் சார்ந்த அல்லது சாராத எந்தவொரு தேவைக்கும் எடுப்பதில்லை என்று குப்பிளான் வாழ் மக்களால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கிய உறவுகளின் பெயர் விபரங்கள் வருமாறு...

டென்மார்க்கில் வசிக்கும் உறவுகள் அனுப்பிய நிதி விவரங்கள் (டென்மார்க் நாட்டு நாணயமான குரோனில்...)

கண்ணன் பொன்னுத்துரை ----- 500 kr 
ஸ்ரீகந்தராசா சிவஞானம் --------- 500 kr 
மதி ஞானலிங்கம் --------- ----------500 kr 
அன்னராசா சிவலிங்கம் ----------500 kr 
அனுசந்தன் சிவலிங்கம் ----------500 kr 
தவலிங்கம் அமுதலிங்கம்-------500 kr 
வசந்தன் நவரத்தினம்---------------500 kr 
சிவலிங்கம் சொக்கலிங்கம்-----500 kr 
நகுலன் குலேந்திரன்-----------------500 kr 
விக்கி சிவலிங்கம்---------------------500 kr 
அன்னலிங்கம் வல்லிபுரம்--------1000 kr 

நோர்வேயில் வசிக்கும் உறவுகள் அனுப்பிய நிதி விவரங்கள் - (நோர்வே நாட்டு நாணயமான குரோனில்...)

கபில் தவராசா--------------------------2500 kr 
விக்கி ஏரம்பமுத்தி -------------------1000 kr 
சுந்தரலிங்கம்-----------------------------500 kr 
கஜன் சுந்தரலிங்கம்-------------------500 kr 


டென்மார்க்கில் திரட்டப்பட்ட மொத்த நிதி -------- 6 000 குரோன்கள் (126 ,000 இலங்கை ரூபாய்கள்)
நோர்வேயில் திரட்டப்பட்ட மொத்த நிதி ------------4500 குரோன்கள் (75 ,000 இலங்கை ரூபாய்கள்)
அசோகன் சபாரத்தினம் (கனடா) -------------------------10 ,000 இலங்கை ரூபாய்கள்  
கமலநாதன் சிவலிங்கம் (கமலன்) (லண்டன்) ---- 25 ,000 இலங்கை ரூபாய்கள் 

மொத்தமாக புலம்பெயர் உறவுகளிடம் இருந்து 236 ,000 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனுடன் டென்மார்க்கில் உள்ள லோகநாதன் நடராஜா (நாதன்) அவர்களினால் 74,000 இலங்கை ரூபாய்கள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 310 ,000 ரூபாய்கள் வங்கியில் வைப்பாக இடப்பட்டுள்ளது.

இன்னும் பல உறவுகள் நிதியுதவி செய்வதாக வாக்களித்துள்ளார்கள் அவர்களின் பங்களிப்பு கிடைத்ததும் விபரங்கள் வெளியிடப்படும்.

நிதி உதவி செய்ய விரும்பும் உறவுகள் குறிஞ்சிக் குமரன் சனசமூக நிலையத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான திருவாளர் நடராஜா லோகநாதன் ( நாதன்) 0045 - 48441070 (டென்மார்க்) அவர்களுடன் தொடர்பு கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முடியும்.

முழுமையான தகவல்களைத் தந்துதவியதுடன் குப்பிளானின் வளர்ச்சிக்கும் அங்கு வாழ்கின்ற மக்களின் முன்னேற்றத்துக்கும் தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கி வரும் லோகநாதன் நடராஜா (நாதன்) அவர்களுக்கு மீண்டும் அகமகிழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

(செய்தியாக்கம் - நியூகுப்பிளான் இணைய தகவல் பிரிவு)


 
Make a Free Website with Yola.