திரு.கந்தவனம் பரமநாதன் 

(உத்தியோகப்பற்றற்ற  நீதவானும், சமாதான நீதவானும், சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்)


தோற்றம் : 26 ஜூன் 1952                                        மறைவு : 30 செப்டெம்பர் 2010


குப்பிழான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பரமநாதன் (உத்தியோகப்பற்றற்ற  நீதவானும், சமாதான நீதவானும், சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்) 30-09-2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தவனம் மாணிக்கம் ஆகியோரின் அன்பு புதல்வனும், பரிபூரணம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

பத்மராஜன்,மங்கையற்கரசி (லண்டன்), அருள்ராசன் (லண்டன்), யசோதா (கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனும், சிவகுமார் (m.s), ராஜினி, விஜயராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், இளமாறன், தருண், அருண், சிந்தியா, கரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

தவமணி(கனடா), பார்வதி, ஆனந்தநாதன் (கனடா), காலம் சென்ற கண்ணன், காலம் சென்ற பாலன், சிவகாமி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள்  03-10-2010 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காகாக குப்பிழான் காடா கரம்பை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தொடர்புகளுக்கு:-மனைவி


இலங்கை


0094 776636469, 0094 213210430
  மங்கையற்கரசி லண்டன் 0044 1245690997, 0044 7903875727
யசோதா கனடா 001 416 2832561
தவமணி கனடா 001 416 3858141

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்http://www.newkuppilan.com/


முன்செல்ல

 
Make a Free Website with Yola.