செல்வன் சம்பந்தன் சக்திதரன் 



தோற்றம் 05-08-1980                                                                 மறைவு 24-12-2010

குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சம்பந்தன் சக்திதரன் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார். 

அன்னார் காலம்சென்ற சம்பந்தன் (குணசம்பந்தன்), சாரதாதேவி (தேவி) ஆகியோரின் அன்பு மகனும்,

சிறிதரன் (அப்பன் - கனடா), கங்காதரன் (மோகன் - கனடா), பகீதரன் (வசந்தன் - இத்தாலி) , தயாவதி (இலங்கை), தயாளினி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

நந்தினி, குலநிதி (நித்தி), சயந்தி, சதீஸ்குமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனனும், பிரியங்கா, பிரக்ஷ்திகா, துதீபன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும். பிரவீன், பனூசன், பனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28-03-2011 திங்கட்கிழமை அன்னாரின் குப்பிளான் இல்லத்தில் இடம்பெற்று, அதன் பின்னர் தகனக் கிரியைகளுக்காக குப்பிழான் காடா கடம்பை மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு,

சிறிதரன்(அப்பன் - கனடா)- 001905-471-33321
கங்காதரன்(மோகன் - கனடா)- 001416-696-5920
பகீதரன் (வசந்தன் - இத்தாலி) - 011393803685355 
தயாவதி (இலங்கை)- 01194214906691
தயாளினி (இலங்கை) - 01194213206275

************************************************************************************************

சம்பந்தன் சக்திதரனின் நினைவலைகளில்...


குப்பிளான் தெற்கு குப்பிளானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சம்பந்தன் சக்திதரன் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை அதாவது இன்று மாலை அகால மரணமாகியுள்ளார். 

* தரம் 5 புலமைப்பரிசிலில் சித்தியடைந்து புகழ் பெற்ற யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரம் வரை பயின்றார்.

* இவர் பாடசாலையில் கல்வி பயிலும் காலத்திலேயே படிப்பில் சிறந்தவராகவும் கவிதைகள் எழுதுவதில் வல்லவராகவும் ஏராளமான கவியரங்குகளில் தன்னுடைய யதார்த்தம் கலந்த நகைச்சுவை கவிதைகளால் எம்மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்.



* யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் சிறப்பாகப் பயின்று வெளியேறி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தனது ஆசிரியர் பணியைத் தொடர்ந்துள்ளார்.

* இயல்பிலேயே சமூக அக்கறை உள்ளவரான இவர் எங்களது கிராமத்தில் உள்ள பல சமூக நிறுவனங்களில் அங்கம் வகித்து எம்மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.

* எப்போதும் புன்னகையுடனும் நகைச்சுவை கலந்து கதைத்து அருகில் உள்ளவர்களை எந்நேரமும் சந்தோசமாக வைத்திருப்பார்.

* இவரது மறைவால் குப்பிளான் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
 
Make a Free Website with Yola.