பிந்திய மரண அறிவித்தலும், அந்தியேட்டி நிகழ்வும்...

திரு இளையதம்பி சுந்தரலிங்கம் (தெய்வம்)


தோற்றம் : 23 பெப்ரவரி  1950                                     மறைவு : 07 ஏப்பிரல்  2011

குப்பிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு இளையதம்பி சுந்தரலிங்கம் (தெய்வம்) அவர்கள் கடந்த 07.04.2011 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார் சரஸ்வதியின் (சரசி) அன்புக் கணவரும், 

நாகேந்திரம், பாலசிங்கம் (குப்பிளான்), சுப்பிரமணியம் (வவுனியா), நவரத்தினம் (கிளிநொச்சி), செல்வம் (மாங்குளம்), துரைராசா, தவமணி (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

 சுமதி (இலண்டன்), சுரேஷ்குமார், அனுஷா, தனுஷா, சங்கீதா, உதயகுமார் (குப்பிளான்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

நந்தன், சசிகரன், சயந்தினி ஆகியோரின் தோழமைமிகு மாமனாரும்,

வனுசன், வேணுகா, மயூரி, யன்சியா, அனுசன் ஆகியோரின் பிரியமான பேரனுமாவார். 

அன்னாரின் பூதவுடல் 07.04.2011 வியாழக்கிழமை அன்றே குப்பிளான் காடாகடம்பை மயானத்தில் எரியூட்டப்பட்டது.. 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்...


தகவல் :- 
குடும்பத்தினர்..

தொடர்புக்கு:- 
சரஸ்வதி (சரசி- மனைவி) - 0094 217 903 800

முகவரி - குருக்கள் ஒழுங்கை,
                   குப்பிளான் வடக்கு,
                   குப்பிளான்.

இன்றைய தினம் 07/05/2011 சனிக்கிழமை திரு இளையதம்பி சுந்தரலிங்கம் (தெய்வம்) அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும் அன்னாரது குப்பிளான் இல்லத்தில் இடம்பெற்றது.அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திக்கிறோம் - குப்பிளான் இணையத்தளம்.  http://www.newkuppilan.com/

 
Make a Free Website with Yola.