குப்பிளானில் கட்டப்படும் தேவாலயத்தை மூடக் கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம்!


குப்பிளானில் கட்டப்படும் கிறிஸ்தவ தேவாலயம் தொடர்பாக இன்று யாழ். மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், பிரதேச சபை என்பவற்றிற்கு முன்னாள்  குப்பிளான்  வாழ் சைவ பெரு மக்களால் அதிரடியாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனை இந்து தீவிரபற்றுடன் செயற்படும் குப்பிளான் இளைஞர்களும், சைவச் சான்றோர்களும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுத்தனர். 

இதில் மேலதிக அரசஅதிபர், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச செயலர் என்பவர்களிடம் நடாத்தப்பட்ட பேச்சுக்கள் முலம் இவ் விடயம் தெடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு  அகிம்சை வழி போராட்டம் பலரையும் எம்பக்கம் திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்களை எம்பக்கம் திருப்பியுள்ளதுடன் அவர்களையும் விழிப்படையச் செய்துள்ளது. 

ஊடகத்துறையினரும் இவ்விடயத்தில் கூடிய அக்கறையுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், இனிவரும் காலங்களில் இவ் இந்து அமைப்புக்களுடன் இணைந்து செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே எமது கிராம மக்கள் இன்னும் வீறுகொண்டு எழுந்து இணைந்து தெடர்ச்சியாக செயற்படுவதன் மூலம் எமது கிராமத்தில் மாற்று மதத்தினை இல்லாதொழிக்க முடியும். 


தற்போதுள்ள இக்கட்டான நிலைமையினை உணர்ந்து குப்பிளான் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் தீவிரமாக போராட வேண்டிய தருணம் இதுவாகும். 

நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே? 

வேற்று மதம் எம் கிராமத்தில் புகுந்தால் எமது மதம் எங்கே?


-குப்பிளான் சைவ மக்கள்-


குப்பிளான் மக்களால் யாழ் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, 

யாழ்ப்பாணம்

05.10.2012

ஊடாக

பிரதேச செயலர்

பிரதேச செயலகம்

உடுவில்.

குப்பிளானில் கட்டப்படும் தேவாலயத்திற்கு எதிராக சைவப் பெரு மக்களால் மேற்கொள்ளப்படும் அகிம்சை வழி செயற்பாடு - 01

தனித்தமிழ் சைவக்கிராமமாகிய குப்பிளான் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் இல்லாத இக்கிராமத்தில் பிரதேச சபையின் கட்டட அனுமதியின்றியும் பிரதேச செயலகத்தின் சமய செயற்பாடுகளுக்கான அனுமதி இன்றியும் கட்டப்படும் கிறிஸ்தவதேவாலயம் தொடர்பாக பிரதேச சபைக்கும்  பிரதேச செயலத்துக்கும் தெரியப்படுத்தி இருந்தோம்.

எமக்கு தெரிந்த வகையில் பிரதேச சபையினால் தடை உத்தரவுக் கடிதம் வழங்கிய போதும் இவர்கள் அதை உதாசீனம் செய்து தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். 

மீண்டும் 10.09.2012 இல் எமது கிராமத்தில் உள்ள பொதுஸ்தாபனங்களால் விடப்பட்ட கோரிக்கைக்கு  பிரதேச சபையோ பிரதேச செயலகமோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. 

அனுமதி இன்றி கட்டப்பட்ட இத் தோவாலயத்தின் திறப்புவிழா எதிர் வரும் சனிக்கிழமை நடைபெற இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் எமது கிராமத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

சமய கலாச்சாரத்தை பேணும் எமது மக்கள் இன்று இத் திறப்பு விழாவைக் கண்டித்து அடையாள அகிம்சை வழி போராட்டத்தை நடத்தியுள்ளது. 

இத் தோவாலய திறப்பு விழாவையும் வழிபாட்டு முறைகளும் எமது கிராமத்தின் சமுக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துகின்றமையை கண்டித்து அடையாள அகிம்சை வழி எதிர்ப்பு போராட்டத்தை சைவ பெரும் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எமது கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர் அல்லர். அவர்கள் எமது பிராந்தியத்தில் புதிதாக தமது செயற்பாடுகளை மேற்கொள்வதும்  எமது வாழ்வின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் மாற்றுமத செயற்பாடுகளில் ஈடுபடுவதும் எமது கிராமத்தில் சமுக அமைதியின்மையின்மையை  ஏற்படுத்தியுள்ளது. 

எனவே அமைதியான வாழ்வுச்சூழலை உத்தரவாதப்படுத்தி உறுதிப்படுத்தும் வரை எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சமுக அமைதிக்கு பங்கம் விளைவிக்காது இருப்பதை உறுதிப்படுத்துவதும் தங்கள் கடமை ஆகும். ஆகவே எங்கள் கோரிக்கையை உடன் ஏற்று உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.

                        குப்பிளான் சைவ மக்கள் 

இதன் பிரதிகள்

Ø கிராம சேவகர்கள்

Ø பிரதேச சபை ஏழாலை

Ø இந்து மகாசபை

Ø இந்து கலாசார திணைக்களம்

Ø இந்து மாமன்றம்

Ø சிவத்தொண்டர் அமைப்பு

Ø கிழக்கு இலங்கை இந்து ஒன்றியம்

Ø தலைவர் சைவர்குருமார் ஒன்றியம்

Ø நல்லை ஆதீனம்

Ø இந்துசமய பேரவை

Ø சைவ பரிபாலன சபை


 
Make a Free Website with Yola.