அமரர் திரு இராமநாதன் சிவசோதி (பொன்னன்) 

கண்ணீர் அஞ்சலி


தோற்றம் : 10 மே 1960                                         மறைவு : 17 ஏப்பிரல் 2011

குப்பிளான் தந்த செல்வமே பொன்னன் அண்ணா...!                                                    

சுவிஸ் உன்னைப் பறித்ததுவோ

பந்தடியில் வீரனாய் பாசத்தில் தீரனாய்...

தேசமெங்கும் சுழன்றடித்த பொன்னன் கண் பட்டதுவோ

காலடியில் கிடந்தளும்…                                                

உன் துணைக்கு என்ன பதில் சொல்வோம்...

ஊரு விட்டு வந்தாலும் 

ஊரை மறவாது உயர்வித்த பண்பாளன்

விளையாட்டு கழகத்தின் வளர்ச்சியில் ஆணிவேராய் உன் 

பங்கு ஊர் சொல்லுமய்யா!

நாடகத்திலும் போட்டாயாமே பல வேடம்

இது கூட ஒரு நாடகமாக இருக்கக் கூடாதா ?

பற்று வைத்த எம்மையெல்லாம்...

பரிதவிக்க வைத்துவிட்டு புற்று நோயா

உன்னை பற்றிக்கொண்டது...

இடது கைக்கும் தெரியாமல் 

நீ செய்த சேவைகள் ஏராளம் 

நீ மறைந்தாலும் உன் பெயர் வாழும் 

உன் ஆத்மா சாந்தியடைய 

பிரார்த்திக்கும், 


-டென்மார்க்கில் இருந்து உன்னை நேசித்த உன் அன்பு உறவுகள்-


 
Make a Free Website with Yola.