கற்கரை கற்பக விநாயகர், கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயங்களின் சிவராத்திரி பெரு விழா தொடர்பான விபரங்கள்...

கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்ற காட்சிகள்... குப்பிளான் வாழ் மக்களின் குலதெய்வமாயும் பேசும் தெய்வமாயும் நின்று பேரருள் புரிகின்ற கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி விழா இன்று இரவு 01/03/2011 புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.


இரவு 9  மணிக்கு விநாயகப் பெருமானுக்கு இடம்பெறும் விசேட பூஜை அபிஷேகங்களைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு முதல் ஜாமப் பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு 2 ஆம் ஜாமப் பூஜையும், 2 மணிக்கு 3 ஆம் ஜாமப் பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4 ஆம் ஜாமப் பூஜையும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் விசேட பூஜையைத் தொடர்ந்து விநாயகப் பெருமானின் திருவீதியுலா நிகழ்வும் இடம்பெறும்.

6 மணிக்கு இடம்பெறும் உதய காலப் பூஜையைத் தொடர்ந்து கிரியைகள் யாவும் இனிதே நிறைவு பெறும். தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் இடம்பெறும். விழா உபயதாரர் க. மனோகரன்

குப்பிளான் தெற்கு ஸ்ரீ கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய சிவராத்திரி தினம்.. 01/03/2011 புதன்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி பூஜைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்பாள் வீதியுலா வந்து தீர்த்தோற்சவம் இடம்பெறும். தொடர்ந்து மகேஸ்வர பூஜை இடம்பெறும். விழா உபயதாரர் நா. லோகநாதன். 


முன்செல்ல 

 
Make a Free Website with Yola.