குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகப் பெருமான் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புலபெயர் வாழ் அன்பர்கள், அடியவர்கள் எல்லோருக்கும் ஆலய பரிபாலசபையினர் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

ஆலயங்களில் 12 ஆண்டுகளுக்கொருமுறை இடம்பெறும் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பரிபாலனசபையினரும், குப்பிளான் வாழ் மக்களும் இருக்கின்றனர்.

ஆனால் அங்கு கட்டிட திருப்பணி வேலைகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. இதனால் ஆலய பரிபலனசபையினர் வெளிநாடுகளில் வாழும் குப்பிளான் வாழ் உறவுகளிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்த்து உள்ளனர்.

உதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக உங்களால் இயன்ற தொகையை ஆலய பரிபாலன சபையினரிடம் கொடுக்கலாம்.

ஆலய பரிபாலன சபையினரின் தொலைபேசி இலக்கங்கள்,

தலைவர்        - சீனித்தம்பி குணலிங்கம் 021- 4902449
செயலாளர்    - சின்னத்தம்பி சொக்கலிங்கம் 021- 3006343
பொருளாளர் - சின்னத்தம்பி ஆனந்தன் 077 - 5957859

இவர்களை நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு உங்களின் கிராம ஆலய வளர்ச்சிக்கு உதவி செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

உங்களின் உதவியை எதிர்பார்த்துள்ள ஆலய பரிபாலன சபையினர் எமது இணையத்தளத்துக்கு ஆலய பரிபாலன சபையினரின் கையெழுத்துக்களுடன் அனுப்பி வைத்துள்ள வேண்டுகோள் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது,


உதவி செய்ய விரும்புவோர் ஆலய பரிபாலனசபையினருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்,

என்றும் நன்றியுடன்,
நியூகுப்பிளான் இணையம்.

***************************************************************************

சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணி வேலைகள்  இடம்பெறும் காட்சிகள்!


குப்பிளான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலயத்தில் வெகு விரைவில் இடம்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயத்தில் திருப்பணி வேலைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன...

திருப்பணி வேலைகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கு தேவையான நிதி உதவிகளைத் தந்துதவுமாறு ஆலய பரிபாலன சபையினர் புலம்பெயர் குப்பிளான் வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது...

 

முன்செல்ல 

 
Make a Free Website with Yola.