குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர், கன்னிமார் கௌரியம்பாள் ஆலயங்களில் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்ற மாசிமகப் பெருவிழா நிகழ்வுகள்... 

குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மாசி மகப் பெருவிழா இன்று காலை ஆறு மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்றது.

அதிகாலையிலேயே பக்தர்கள் ஆலயத்தை நோக்கி வந்து விநாயகப் பெருமானை வழிபட்டனர். விநாயகப் பெருமான் சந்நிதானத்திலேயே நடேசர் அபிஷேகம் நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


குப்பிளான் தெற்கு வீரமனைப் பதியில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மாசி மகப் பெருவிழா இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மிகச் சிறப்பாக இடம்பெற்றது. விசேட அபிஷேக பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதியுலா வருதல்   இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மகேஸ்வர பூஜை என்றழைக்கப்படும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. விழா உபயதாரரான சி. விக்கினேஸ்வரன் குடும்பத்தினருடன் ஊரவர்களும் இணைந்து இன்றைய மாசி மாகப் பெருவிழாவை சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


முன்செல்ல

 
Make a Free Website with Yola.