தொடர்ச்சி...


செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்! 


(கவியாக்கம் - குப்பிளான் நந்தா)

செம்மண் இரவுக்காய்
செதுக்கிய புதுக்கவிதை
செந்தமிழ் செருக்குடன்
செழிப்புற வாழ்த்துகிறேன்.

அப்பு ஆச்சி வாழ்ந்த மண்ணில்
அந்நியன் பாதம் பட்டதினால்
அகதியாய் கனேடிய மண்ணில்
வாழ்கின்ற போதினிலும் - எம்மண்ணை
வளமுடன் வளர்க்கும் உறுதியோடு
உறவாடும் உறவுகளோடு
நானும் ஒருவனாய் நிற்பதில்
மனதினில் இறுமாப்பு   செம்மண்ணில் பிறந்ததில்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்!

கலைத்தாயின் மடியினில்
எத்தனை கலைஞர்கள் எம் மண்ணில்
அண்ணாவியார் பீதாம்பரனார் தொடங்கி
இன்றைய துள்ளாட்ட இளசுகள் வரையாய்
விளையாட்டில் எத்தனை வீரர்கள்
விக்னேஸ்வராவின் பெயரினில்
செந்தில்நாதையர் முதலாய் செந்தமிழில் விளையாடும்
சிவமகாலிங்கம் அனுசாந்தன் வரையாய்
சொற்பொழிவின் சிற்பர்கள்

வித்தியாசாலையதை மகாவித்தியாலயமாய்
மாற்றியமைத்த (ஆ) மகாலிங்கம்
வீதியெங்கும் இரவினில் கூட்டி வந்த
எங்கள் கணேசலிங்கம்
எத்தனையோ செம்மல்களைப் பெற்றெடுத்த - என்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்

உன விளையும் நாளைய பயிரும்
செம்மண் மணம் கமழ
உன் பெயர் சொல்லும்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்

ஓர் விடியலின் பின்
செதுக்கிடுவோம் சிற்பமாய் உனை
எம் மீது உறுதி கொள்
செம்மண்ணே விறுமாப்பு நீ கொள்

முன்செல்ல


 
Make a Free Website with Yola.