குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் வழங்கும் தேநீர் விருந்து உபசாரமும் கிரிக்கெட் போட்டி நிகழ்வும்...


குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்துடன் மோதி முதலாமிடம் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டமையை கௌரவிக்கும் முகமாக நாளை (28/08/2010) மாலை 5 மணிக்கு தேநீர் விருந்துபசாரமும் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. காட்சிப் போட்டியாக குப்பிளான் விக்கினேஸ்வரா அணியை எதிர்த்து ஈவினை அம்பாள் அணி மோத இருக்கின்றது. கிரிக்கெட் போட்டி நாளை மாலை 5 மணிக்கு குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும். தொடர்ந்து பதக்கம் அணிவிக்கும் நிகழ்வுகளும் அதன் பின்னர் தேநீர் விருந்து உபசாரம் இடம்பெறும். இந்தக் கௌரவிப்பு நிகழ்வு லண்டன் வாழ் குப்பிளான் மைந்தன் முகுந்தனினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் ஏராளமான புலம்பெயர் குப்பிளான் வாழ் மக்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க உள்ளனர்.

தகவல் : - விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர் - திரு. வை. தமிழ்ச்செல்வன்

முன்செல்ல 

 
Make a Free Website with Yola.