மாவட்டமட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழக வீரர்கள்...! 
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

 


உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு 05.04.2011 அன்று மாலை 4.00க்கு ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. 


இதில் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா  விளையாட்டு கழகம் சாதனைகள் படைத்துள்ளமை எமது குப்பிளான் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.. 

எமது குப்பிளான் இளைஞர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் பல சாதனைகள் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


2011ம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டியில்  விக்கினேஸ்வரா  விளையாட்டு கழகம் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் 1ம் இடத்தினை பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்ததுடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டதுடன் பிரதேச செயலக பிரிவில் முழுமையான தரப்படுத்தலில் 3ம் இடத்தினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். 


மேலும் எமது கழக வீரர்கள் மாவட்ட மட்டத்தில் இடம்பெறவுள்ள போட்டிகளில் உடுவில் பிரதேச செயலக அணிசார்பாக பங்குபற்ற உள்ளமை சிறப்பம்சம் ஆகும்.  


நன்றி  -குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக தகவல் பிரிவு -

முன்செல்ல

 
Make a Free Website with Yola.