குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் புதிய திட்ட வரைபடம் வெளியீடு!


கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் நிர்வாகசபைக் கூட்டம் பதினோராவது ஆண்டாக  25.03.2012 அன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக இரண்டு விடயங்கள் ஆராயப்பட்டன.


* இந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக அங்கத்தவர்களிடையே ஆலோசித்து திகதி முடிவு செய்யப்பட்டது.

* ஒரு நூலகத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களுடனும் குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தை இருமாடிகள் கொண்டதாக கட்டியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு திட்ட முன்மாதிரிப் படம் அங்கத்தவர்களுக்கு காட்டப்பட்டது.

* இந்த மாபெரும் பணிக்காக உலகெங்கிலும் பரந்து வாழும் குப்பிளான் வாழ் மக்களிடமிருந்து ஆதரவுக் கரத்தை எதிர்பார்க்கின்றனர் கனடாவிலுள்ள குப்பிளான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தினர்....

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.


எதிர்காலத்தில் அமையவுள்ள குப்பிளான் விக்கினேஸ்வர சனசமூக நிலையத்தின் திட்ட மாதிரி வரைபடம்.... 


 
Make a Free Website with Yola.