குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு விபரங்கள்...

குப்பிளான் தெற்கு குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்துக்கான புதிய
உறுப்பினர்கள் தெரிவுக்கான கூட்டம் இன்று 25-02-2011 5.30 மணியளவில்
கன்னிமார் ஆலய முன்றலில் கிராமசேவையாளர் திரு.சோ. பரமநாதன் அவர்கள்
தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை
தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் சுமார் 25 பேர் வரையானோர்
கலந்து கொண்டார்கள்.
தலைவர்: கு. சர்வானந்தன் - பிரேரித்தவர் மு. நவரட்ணம், ஆமோதித்தவர் செ.கிரிதரன்.
உபதலைவர்: மு. நவரட்ணம் - பிரேரித்தவர் சோ. பரமநாதன், ஆமோதித்தவர் செ.விஜிதரன்.
செயலாளர்: செ. ரவிசாந் - பிரேரித்தவர் கு. உதயகுமார், ஆமோதித்தவர் சி. தங்கராசா
உபசெயலாளர்: பொ. ஆனந்தகுமார் பிரேரித்தவர் செ.ரவிசாந் , ஆமோதித்தவர் சி. திருச்செல்வம்
பொருளாளர்: செ. கிரிதரன் பிரேரித்தவர் பொ. ஆனந்தகுமார் , ஆமோதித்தவர் இ. தவராஜா
கணக்காய்வாளர்: கு. உதயகுமார்
நிர்வாகசபை உறுப்பினர்கள்: இ. தவராஜா, செ.விஜிதரன், சி. தங்கராசா, சி. திருச்செல்வம், இ. முகுந்தன்
இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகசபையானது இன்று முதல் இயங்கத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிக்குமரன் சனசமூகநிலைய வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று கிராமசேவையாளர் சோ. பரமநாதன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் மாதாந்தம் போடுவதற்கான செலவை மாதம் / வருடத்துக்கு வெளிநாட்டில் வாழும் எம்கிராமத்தவர்கள் ஏற்று தாமாக முன்வந்து உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர் நிர்வாக சபையினர்.
உதவி செய்ய விரும்புபவர்கள் நேரடியாக கிராமசேவையாளர் சோ. பரமநாதன் அவர்கள் மூலமாக உதவலாம்.
கிராமசேவையாளர் சோ. பரமநாதன் - தொலைபேசி இலக்கம் - 0213216982
கைபேசி இலக்கம் - 0777043427
முன்செல்ல