கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பமும் கொடியேற்ற நிகழ்வும் 2011 (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


குப்பிளான் மண்ணுக்கு குன்றாது நலம் வழங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று 08.04.2011 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 11.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை நேரப் பூஜைகள் ஐந்து மணிக்கு ஆரம்பமாகியது. தொடர்ந்து மாலை 6.15 மணியளவில் சிவத்தமிழ் வித்தகர் சிவமாகாலிங்கம் அவர்களின் " வாக்குக்கு அருணகிரிநாதர் " என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது.

தொடர்ந்து 7.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி வளம் வருதலோடு முதலாவது நாள் மகோற்சவ நிகழ்வுகள் இனிதே நிறைவேறின... ஏராளமான பக்தர்கள் உற்சவங்களில் கலந்து கொண்டமையைக் காணக் கூடியதாக இருந்தது. கொடியேற்ற விழா உபயதாரர் திரு . இ. சண்முகநாதன்

முன்செல்ல

 
Make a Free Website with Yola.