அமரர் திரு. பிரபலாதன் அம்பிகைபாகன் 

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...!


(குப்பிளான் தெற்கு, குப்பிளான்)

(குப்பிழான் தெற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் பிரபலாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் நேற்றாகும்.)

ஓராண்டு ஆனதுவோ பிரபா... 

இன்னும் உன் நகைச்சுவை பேச்சும் 

நேர்த்தியான எண்ணங்களும் 

எம் நெஞ்சை விட்டு போகவில்லை... 

வாழ்க்கை என்னும் படகில் 

பாசம் என்னும் வலை விரித்து 

ஆழமான கடலினில் எமையெல்லாம் 

கதறவிட்டு சென்றாயோ...

காலனின் தந்திரத்தால் - நீ 

எம்மை விட்டு பிரிந்தாலும் 

ஆண்டவன் மீதும், தேசத்தின் மீதும் 

நீ கொண்ட அன்பு என்றென்றும் நிலைத்திருக்க...

உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல 

இறைவனை பிரார்த்திக்கின்றோம்...


ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி.....

தகவல் : குடும்பத்தினர் 

 
Make a Free Website with Yola.